இன்றைய வானிலை அறிவிப்பு

03 Apr, 2021 | 06:46 AM
image

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும். 

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும். 

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right