(செ.தேன்மொழி)

பேலியகொட மேம் பாலத்திற்கு அருகில் கார் ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரரிவித்தனர்.

பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி  - கொழும்பு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கார் ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தீயணைப்பு பணிகள் இடம்பெற்றன.

இதன்போது காரில் ஏற்பட்ட தீயை கட்டுபடுத்துவதற்காக தீயணைப்பு கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன.  தீப்பரவல் காரணமாக குறித்த வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்ததுடன் , இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

தீ பரவல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.