(எம்.எப்.எம்.பஸீர்)
அவிசாவளை - மாதொல பகுதியில், பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் நிலையம் ஒன்றில் திடீரென நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று ( 2) மாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.
சேகரிக்கப்பட்ட பழைய இரும்பு பொருட்களை, ஊழியர் ஒருவர் எரிவாயுவை பயன்படுத்தி வெட்டும் போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அவர் குறித்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 3 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்
சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக சம்பவ இடத்தை பூரண ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM