(செ.தேன்மொழி)

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதியொருவருக்கு போதைப் பொருள் மற்றும் புகையிலை என்பவற்றை கொடுக்க முயற்சித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதியை பார்வையிட வந்த பெண்னொருவர் சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அப் பெண் சிறைகைதிக்கு வழங்குவதற்காக கொண்டு வந்த துவாயிலிருந்து ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மற்றும் புகையிலை என்பன மீட்க்கப்பட்டுள்ளன.

இவற்றை சிறைச்சாலைக்குள் கொண்டு சென்ற குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.