2021 டி-20 உலகக் கிண்ணம் ; பாகிஸ்தானுக்கான விசா உத்தரவாதம் குறித்து ஐ.சி.சி. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

Published By: Vishnu

02 Apr, 2021 | 10:58 AM
image

இந்த ஆண்டு ஒக்டோபரில் டி-20 உலகக் கிண்ணத்தை நடத்த இந்தியா தயாராகி வருவதால், விசா மற்றும் வரி ஏற்பாடுகள் குறித்து கிரிக்கெட்டின் உலக நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஊக்கமளிக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாடுகளுக்கு இடையே 2013 முதல் கிரிக்கெட் தொடரை நடத்தவில்லை.

இரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுகள் உறைபனியாக இருப்பதால், உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக தனது வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் விசாக்களுக்கான உத்தரவாதம் அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் எஹ்சன் மணி முன்னதாக ஐ.சி.சி.யிடம் கேட்டுள்ளார்.

இந் நிலையில் இந்திய அரசாங்கத்திடமிருந்து போட்டிகளுக்கு வரி விலக்கு பெறுவது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

"இந்தியாவில் ஐ.சி.சி ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்தை சுற்றியுள்ள ஏற்பாடுகள் குறித்து வாரியம் ஒரு புதுப்பிப்பைப் பெற்றது" என்று ஐ.சி.சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரி ஏற்பாடுகள் மற்றும் விசா உத்தரவாதங்கள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் நேர்மறையான கலந்துரையாடல்கள் குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் புதுப்பிப்பும் இதில் அடங்கும்.

இவ் இரு பிரச்சினைகளும் அடுத்த மாதத்தில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08