எசல பெரஹரா இன்றுடன் நிறைவு : ரந்தோலியை ஜனாதிபதி பார்வையிடுவார்.!

Published By: Robert

17 Aug, 2016 | 09:58 AM
image

வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க கண்டி எசல பெர­ஹ­ராவின் இன்­றைய இறுதி ரந்­தோலி பெர­ஹரா ஊர்­வ­லத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பார்­வை­யி­டுவார்.

எசல பெர­ஹரா கடந்த மூன்றாம் திகதி அதி­காலை கண்டி நகரில் அமைந்­துள்ள ஸ்ரீ கதி­ரேசன், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீநாத, ஸ்ரீ பத்­தினி ஆகிய நான்கு தேவா­ல­யங்­க­ளிலும் இடம்­பெற்ற காப்புக் கட்­டு­த­லுடன் ஆரம்­ப­மா­கி­யது. அதனைத் தொடர்ந்து 28 ஆம் திகதி முதல் 12 ஆம் திக­தி­வரை கும்பல் பெர­ஹரா ஊர்­வலம் நடை­பெற்­றது.

13 ஆம் திகதி ஆரம்­ப­மான ரந்­தோலி பெர­ஹரா ஊர்­வலம் இன்­றி­ர­வுடன் நிறை­வ­டை­கின்­றது. இதன் பொருட்டு இன்று மாலை கண்டி ஸ்ரீ செல்வ விநா­யகர் ஆல­யத்­தி­லி­ருந்து ஆல­யத்தின் பிர­தம ரஷ்டி கோ. கிருஷ்­ண­மூர்த்தி தலை­மையில் கண்டிவாழ் இந்து பிர­மு­கர்கள், வர்த்­த­கர்கள், பிர­தி­நி­திகள் என பலரும் நந்தி ஏந்­தி­ய­வாறு மேள, தாள வாத்­தி­யங்­க­ளுடன் தலதா வீதி வழி­யாக ஊர்­வ­ல­மாக தலதா மாளி­கைக்குச் செல்­வார்கள். அங்கு இவர்­களை திய­வ­தன நிலமே வர­வேற்பார்.

பின்னர் இந்து பிர­மு­கர்கள் திய­வ­தன நில­மேக்கு சந்­தன மாலை அணி­வித்து தில­க­மிட்டு பொன்­னாடை போர்த்தி கௌர­விப்­பார்கள்.

அதன் பின்னர் அங்கு இந்து சமய விசேட பூஜை­களை நடத்­து­வார்கள். இன்று இரவு இறுதி ரந்­தோலி பெர­ஹரா ஊர்­வலம் நிறை­வ­டைந்த பின்னர் நாளை வியா­ழக்­கி­ழமை அதி­காலை கெட்­டம்பே மகா­வலி நதியில் தீர்த்­தோற்­சவம் நடை­பெறும்.

தீர்த்­தோற்­ச­வத்­தின்­போது சேக­ரிக்­கப்பட்ட நீர் கல­சங்கள் எடுத்துவரப்­பட்டு கண்டி ஸ்ரீ செல்வ விநா­யகர் ஆல­யத்தில் வைக்­கப்­பட்டு விசேட பூஜைகள் நடை­பெறும்.

பின்னர் பகல் 12.00 மணி­ய­ளவில் திய­வ­தன நிலமே மற்றும் பஸ­நா­யக்க நில­மேக்கள் ஸ்ரீ செல்வ விநா­யகர் ஆல­யத்தை வந்­த­டைந்­ததும் பகல் பெர­ஹரா ஊர்­வலம் அங்­கி­ருந்து ஆரம்­ப­மாகி மணிக்கூட்டு வீதி, தலதா வீதி, கொட்­டு­கொ­டல்ல வீதி, கந்தே வீதி, டி.எஸ். சேனா­நா­யக்க வீதி வழி­யாக வந்து இராஜ வீதி வழி­யாக ஸ்ரீ தலதா மாளி­கையை சென்­ற­டைந்­ததும் கண்டி எசல பெர­ஹரா நிறை­வ­டையும்.

அதன் பின்னர் திய­வ­தன நிலமே தலை­மையில் பஸ­நா­யக்க நில­மேக்கள் பெர­ஹரா ஊர்­வ­லங்­களில் பங்­கு­பற்றி திற­மை­களை வெளிப்­ப­டுத்­திய கலை­ஞர்கள் ஊர்­வ­ல­மாகச் சென்று ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து எஸல பெர­ஹரா நிறைவடைந்த செய்தியை அறிவிப்பார் கள்.

இதனையடுத்து ஜனாதிபதி கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி பணப்பரிசு மற் றும் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி கௌரவித்து தேநீர் விருந்துபசாரமும் வழங் கிக் கௌரவிப்பார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04