-சுபத்ரா
போர் வீரர்களைப் பாதுகாக்கின்ற வகையில், புதிய அரசியலமைப்பில் சட்டம் கொண்டுவரப்படும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம்மீது, வாக்கெடுப்பு நடப்பதற்கு முதல் நாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்திருந்தார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் படைவீர்ர்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனை ஒரு வகையில், ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் ஒரு நகர்வாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.
ஏனென்றால், ஜெனிவா தீர்மானத்தின் முக்கியமான அடிப்படையே, போர்க்கால மீறல்கள் குறித்து விசாரித்துப் பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்திக் கொள்வதுதான்.
அத்தகைய பொறுப்புக்கூறலின் மூலம்தான், இலங்கையில் நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்த முடியும் என்பது சர்வதேச சமூகத்தின் கருத்தாக உள்ளது.
அதனை வலியுறுத்தியே, ஜெனிவாவில் இதுவரை தீர்மானங்கள் முன்னகர்த்தப்பட்டிருக்கின்றன.
இந்தமுறை கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில், போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பது முக்கியான அம்சமாக கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் இதற்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்த வேண்டும்.
மத்திய தகவல் சேகரிப்பு கட்டமைப்பின் மூலமான இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்ற விசாரணைகளுக்கு வருகின்றபோது, தேவையான ஆதாரங்களை, முழுமையான சட்ட வலுவுடன் சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இந்த தகவல் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக திருப்திப்படுத்தக் கூடியதொன்றாக இல்லாவிடினும், இலங்கை அரசாங்கத்தினால் உதாசீனம் செய்யக் கூடியதொரு விடயமாக இருக்கமுடியாது.
ஏனென்றால், எதிர்கால விசாரணைகளுக்கான ஆதாரங்களைத் தேடித் திரட்டி, வைத்திருக்கும் நிலையானது, எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய ஒரு குண்டுக்கு மேல் உறங்குவதற்கு சமமானது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-9
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM