வன்முறையில் பிறந்த தேசத்தின் ஆறாத போர் வடுக்கள்

Published By: Gayathri

01 Apr, 2021 | 01:11 PM
image

த கொன்வர்சேஷன் இணையத்தின் ஆசிரியர் மிஷா கிட்செல் எழுதியகட்டுரை

தமிழில்; சதீஷ்கிருஷ்ணபிள்ளை

பங்களாதேஷ் சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. அந்தத் தேசம் விடுதலைபெறக் காரணமாகவிருந்த விடுதலைப்போர் ஆரம்பமானதை பங்களாதேஷ் மக்கள் நினைவுகூர்ந்துள்ளனர். 

1971ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி சுதந்திரம் பெற்ற பங்களாதேஷ், ஒன்பது மாதங்கள் நீடித்த இரத்தக்களரியில் உருவானதேசம். 

இதன்வேர்கள், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்று பாகிஸ்தான் தனிநாடாக மாறியதுடன் தொடர்புடையவை.

பிரித்தாண்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் தெற்காசியாவை விட்டுவெளியேறியபோது, பிரிவினையுடன் தொடர்புடையவன் முறைகளில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், கோடிக் கணக்கானவர்கள் வலிந்து இடம்பெயரச் செய்யப்பட்டனர்.

அப்போதைய பாகிஸ்தான் இந்தியாவின் பெருநிலப்பரப்பால் பிரிக்கப்பட்ட இரு புவியியல் பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

இரண்டிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். மேற்குப் பாக்கிஸ்தானில் பஞ்சாபிகள், பஷ்தூன்கள் போன்ற இனக்குழுமங்கள் இருந்தன. 

கிழக்குப் பாகிஸ்தான் வங்காளி இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. அதுவே இன்றைய பங்களாதேஷ்.

கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையில் நிலவிய மொழி வேறுபாடுகளும், அரசியல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டன. அவை இன்றும் தாக்கம் செலுத்துகின்றன.

மொழி வேறுபாட்டை ஆராய்வோம்

பாக்கிஸ்தானின் ஸ்தாபகத்தலைவர் மொஹம்மட் அலிஜின்னா, உருதுவே புதிய பாக்கிஸ்தானின் அரச மொழியாக இருக்கவேண்டும் என்றார். 

கிழக்குப் பாக்கிஸ்தானில் வாழ்பவர்கள் பேசும் பெங்காளி என்பது இஸ்லாமியர்களின் மொழி அல்ல என்று வாதிட்டார்.

இஸ்லாம் என்ற மதத்தால் ஐக்கியப்பட்ட இரு பிராந்தியங்கள், இவையிரண்டும் பிரத்தியேக கலாசாரங்களைக் கொண்டவை. 

எனினும், புதிய பாக்கிஸ்தானுக்கு தனியொரு அடையாளத்தை உருவாக்கவேண்டும் என்ற நப்பாசையில் உருது மாத்திரம் என்ற கொள்கை அமுலாக்கப்பட்டது.

கிழக்குப் பாக்கிஸ்தானில் பெங்காளி புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. அவற்றில் பெருங்கவி ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புக்களும் அடங்கும்.

பெங்காளி மொழியில் கல்வி கற்பிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-12

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுள் அதிகம்

2024-12-08 12:55:25