(இராஜதுரை ஹஷான்)
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஜனாதிபதி தலையிடவில்லை, அரசியல் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் அதிகாரத்தினால் பாதிப்பட்ட அரச சேவையாளர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளார். ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய காலத்தில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல சவால்கள் தோற்றம் பெற்றன. சிறந்த திட்டமிடல் ஊடாக அனைத்து சவால்களும் வெற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி உள்ளுர் உற்பத்தியாளர்களை பலப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.
அரசியல் பழிவாங்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் தலையீடு காணப்பட்டதாக எதிர் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்ற அரசியல் பழிவாங்கள் குறித்து ஆராய 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் குறைகேள் அதிகாரி( ஒம்புட்ஷ்மன்) காரியாலயம் நிறுவப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்ற அரசியல் பழிவாங்கள் குறித்து பல தரப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. விசாரணை ஆணைக்குழு எவ்வித அரசியல் அழுத்தங்களுமின்றி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஜனாதிபதி ஒருபோதும் தலையிடவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்களினால் பாதிக்கப்பட்டுள்ள அரச சேவையாளர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM