2016 ஆம் ஆண்டின் மத்திய வங்கி பிணை மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ரவி கருணாநாயக்கவுக்கும் ஏனைய ஆறு பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியது.

மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை ஒன்றூடாக அரசாங்கத்துக்கு 1500 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்திய விவகாரம் தொடர்பிலான வழக்கில் ரவி கருணாநாயக்க கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏனையவர்களுக்கு மீது குற்றம் சாட்டப்பட்டது.