அமெரிக்கா – தெற்கு கலிபோர்னியாவில் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு இடம் பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள். 

மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூடுட்டு சம்பவம் இதுவாகும்.

இதேவேளை, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச் சூட்டில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேரும்,  சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூட்டில் 10 பேருமாக கடந்த சில தினங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், ஓரேஞ்ச் கவுண்டியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்  ஒரு சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு நபர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.