அரிசி வகைகளை குறைந்த விலையில் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

2,500  உள்ளூர் கூட்டுறவு நிறுவனங்கள், 454 ச.தொ.ச நிறுவனங்கள் உட்பட 4,000 இற்கும் அதிகமான சுப்பர் மார்க்கெட்டுகளில் புத்தாண்டு காலப்பகுதியினை முன்னிட்டு குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை பெற்றுக்கொடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 93 ரூபாவுக்கும் விற்கப்படும். 

இதற்காக அனைத்து சுப்பர் மார்க்கெட்களிலும் அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அரிசி மாஃபியாவைத் தடுக்கும் பணியை ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்திருந்தார். அதனை நான் செய்து முடித்துள்ளேன். அரிசி மாஃபியாவை தடுக்காதிருந்தால் புத்தாண்டுக் காலப்பகுதியில் 115 ரூபாவுக்குதான் ஒரு கிலோ அரிசியை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.