இலங்கை, ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி 8 விக்கட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் 24 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 288 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் கௌசல் சில்வா 115 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் சந்திமல் 43 ஓட்டங்களையும், அணித்தலைவர் மெத்தியுஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆஸி அணி சார்பில் லியோன் 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.