1000 ரூபா சம்பள விவகாரம் : வர்த்தமானிக்கு இடைக்கால  தடை உத்தரவு பிறப்பிப்பதா ? இல்லையா ? - உத்தரவு 5 ஆம் திகதி

01 Apr, 2021 | 04:40 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த  அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக  நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானிக்கு, பெருந்தோட்டக் கம்பனிகள் கோரும்  இடைக்கால தடையுத்தரவை விதிப்பதா, இல்லையா என்பது தொடர்பிலான உத்தரவை எதிர்வரும் 05 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. 

அத்துடன்  பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிப்பது தொடர்பிலான தீர்மான உத்தரவும் அன்றைய தினத்தில் அறிவிக்கப்படும் என  மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானியை வலு இழக்கச் செய்யும் வகையில் எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்கக் கோரி 20 பெருந்தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்த ரீட் மனு நேற்று பரிசீலிக்கப்பட்ட போதே  இது குறித்து அறிவிக்கப்பட்டது.

குறித்த ரீட் மனு நேற்று  மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும்  நீதிபதி மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன்போது, மன்றில் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுசந்த பாலபட்டபெந்திகே, குறித்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என நீதிமன்றைக் கோரினார்.

பல வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கையை ஆராய்ந்த அரசாங்கம், அவர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதால், மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து, அந்த மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  சுசந்த பாலபட்டபெந்திகே மன்றைக் கோரினார்.

 இந் நிலையிலேயே மனுதாரர் தரப்பின் கோரிக்கைக்கு அமைய அவர்கள் கோரும் இடைக்கால தடை உத்தரவை வழங்கி வழக்கை விசாரணைக்கு ஏற்பதா, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புவதா உள்ளிட்ட விடயங்களை எதிர்வரும் 5 ஆம் திகதி அரிவிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

முன்னதாக அக்கரப்பத்தனை பெருந்தோட்டக் கம்பனி, எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனி உள்ளிட்ட 20 கம்பனிகள், கடந்த 12 ஆம் திகதி, மேன் முறையீட்டு நீதிமன்றில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.  

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழிலாளர் ஆணையாளர்  நாயகம் பிரபாத் சந்ர கீர்த்தி,  தேயிலை தொழிற் துறை சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

 அண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.  

இவ்வாறு தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக  நிர்ணயிக்க சம்பள நிர்ணய சபையூடாக அனுமதி பெறுவது குறித்து வரவு செலவு திட்டத்திலும் உள்வாங்கப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் தமது  ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 இந்த தீர்மானமானது சட்டத்துக்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்களான பெருந்தோட்ட நிறுவனங்கள்,  திடீரென தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, பெருந்தோட்ட தொழிற் துறையையே  பிரச்சினைக்குள் தள்ளும் செயல் என மனுவூடாக கூறியுள்ளனர்.

 மனுதாரர்களான, தாம் ( பெருந்தோட்ட கம்பனிகள்) அரசுக்கு பாரிய தொகை வரியினை செலுத்தும் நிலையில், இந்த சம்பள அதிகரிப்பு ஊடாக கம்பனிகள் பாரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் எனவும்  மனுவில் கூறியுள்ளனர்.

 இவ்வாறான பின்னணியில் தமது மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றில் ஆஜராக  அறிவித்தல் விடுக்குமாறும், தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை நிர்ணயம் செய்துள்ள வர்த்தமானி அறிவித்தலை வலு இழக்கச் செய்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41