(லியோ நிரோஷ தர்ஷன்) 

நேரமும் இடமும் தெரியாமல் அழைப்பிதழை எவ்வாறு அனுப்ப முடியும் என கேள்வியெழுப்பியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள், சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்தில் கலந்துக் கொள்வது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க வில்லை எனவும் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகல் நகரில் எதிர்வரும் 4 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனம் நடைப்பெறவுள்ளது. இதில் கலந்துக் கொள்வதற்கான அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுதந்திர கட்சியின் பொது சௌயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைப்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநித்ததுவம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்தில் கலந்துக் கொள்வதற்கான அழைப்பு இது வரையில் கிடைக்கப்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.