வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மத்திய கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி நேற்று மருதானை சாஹிரா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மா, மனோகணேஷன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

(படப்பிடிப்பு தினித் சமில்க்க)