-கபில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைத் தொடர்ந்து, சர்வதேச சமூகம் எவ்வாறு செயற்படப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியதுடன், சர்வதேச சமூகத்தின் கடப்பாடு முடிந்து போய்விடவில்லை.

இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக பல நாடுகள் வாக்குறுதி அளித்திருக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்கு அமையவே, ஜெனிவா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை தீர்மானம் முழுமையாக உள்வாங்கவில்லை என்பது பெரும் குறைபாடாக, பாதிக்கப்பட்ட தரப்பினரால் உணரப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் கூறியிருந்த ஒரு முக்கியமான பரிந்துரையானது, போர்க்குற்றச்சாட்டுகள் மீறல்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்துக்கு அமைய, உறுப்பு நாடுகள் பயணத் தடைகளை விதிக்க வேண்டும்; சொத்துக்களை முடக்க வேண்டும்; என்பதாகும்.

ஆனால், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்த விவகாரம் அடியோடு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஏனென்றால், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு ‘தடைகள்’ (sanctions) என்ற சொல் உவப்பானதாக இருப்பதில்லை. அதனை வெறுப்புடன்தான் நோக்குகின்றன.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் எந்த நாட்டின் மீதும், எந்த வகையான தடைகளை விதிக்கவோ, அதனை நடைமுறைப்படுத்தவோ முடியாது.

ஆயினும், ஐ.நா. மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை பின்பற்றி, உறுப்பு நாடுகளை தமது நாடுகளில் இவ்வாறான தடைகளை முன்னெடுக்குமாறு பரிந்துரைக்கும் வாய்ப்புகள் இருந்தன.

எனினும், அவ்வாறான விடயத்தை அனுசரணை நாடுகள் தமது தீர்மானத்துக்குள் உள்ளடக்கியிருக்கவில்லை.

எவ்வாறாயினும், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், உறுப்பு நாடுகளை நோக்கி முன்வைத்த வேண்டுகோள், இன்னமும் அப்படியே இருக்கிறது என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.

போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான ஒரு கட்டமைப்பை செயற்படுத்துவதில், இந்தமுறை தீர்மானம் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், அனுசரணை நாடுகளுக்கு ஒரு பொறுப்பு இருப்பதை தட்டிக்கழிக்க முடியாது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதியாக இருப்பதாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த நாடுகளுக்கு உள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.