(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை பெய்திலி தோட்டத்தில் பெண் தொழிலாளிகள் நான்கு பேர் குளவிகொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீதே குளவி கொட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் இரண்டு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.