வீழ்ச்சியடைந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி

31 Mar, 2021 | 03:40 PM
image

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாக உள்ளது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த நாணயமாற்று விதத்திற்கமைய  அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாகவும் , கொள்வனவு விலை 197.62 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாவாக அதிகரித்தது.

இந்நிலையில் இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலர் பெறுமதியுடன் ஒப்பீட்டளவில் இலங்கை நாணயத்தின் பெறுமதி நூற்றுக்கு 5.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right