டெல்லியில் உள்ள சப்தர்ஜங் அரச வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் தீ விபத்தின்போது சம்பவ இடத்தில் விரைந்து செல்லப்பட்டதாகவும், சுமார் 50 நோயாளிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டெல்லி தீயணைப்பு சேவைகளின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த தீ விபத்தினால் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த படுக்கைகளும் உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவத்தினால் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படாத நிலையில் தீ விபத்துக்கான காரணங்களை கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.