இந்திய கடற்பரப்பில் 300 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஒரு பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளுடன் ஒரு இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஆறு இலங்கைப் பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

'ரவிஹான்சி' என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல், மார்ச் 25 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் கேரளாவின் திருவனந்தபுரம் கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் படகு திருவானந்தபுரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் படகினை தடுப்பு காவலில் எடுத்தது.

இந்த படகில் 300.323 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐந்து AK-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 9 மிமீ துப்பாக்கி ரவைகள் ஆயிரம் மற்றும் பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் இருந்து அடையாளம் தெரியாத படகொன்று மூலம் இந்த சரக்குகளை கைப்பற்றப்பட்ட ரவிஹான்சி என்ற இலங்கை படகிடம் பறிமாற்றம் செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.