விலங்குகளுக்கான முதல் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா

Published By: Vishnu

31 Mar, 2021 | 10:37 AM
image

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா புதன்கிழமை அறிவித்துள்ளது.

கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்ட புதிய தடுப்பூசி, விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான பெடரல் மையத்தால் உருவாக்கப்பட்டது.

மேலும் ஆரம்பகட்ட சோதனைகளின் போது இது எந்த பக்க விளைவுகளையும் காட்டவில்லை.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கிய கார்னிவாக்-கோவின் மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள், மிங்க், நரிகள் மற்றும் பிற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசி பாதிப்பில்லாதது என்ற முடிவுக்கு வர உதவியதுடன் விலங்குகள் மற்றும் அதிக நோயெதிர்ப்பு செயல்பாடுகளைக் வெளிக்காட்டியுள்ளது.

கிரீஸ், அவுஸ்திரேலியா, போலந்து, கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்கனவே  கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன.

இதனால் ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம் என்று ரஷ்யாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவும் பின்லாந்தும் வைரஸின் மாற்ற விகாரங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் விலங்குகளுக்கான கொவிட் தடுப்பூசிகளை உருவாக்க முயற்சிக்கின்றன. 

கொரோனா வைரஸ் சிமியன் குரங்குகள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளையும் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17