(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 92 000 ஐ கடந்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை இரவு 8 மணி வரை 102 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 92 405 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 89 090 பேர் குணமடைந்துள்ளதோடு , 2749 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இன்று காலை வரை 9 இலட்சத்து 03 467 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின.

அத்துல்கோட்டையை சேர்ந்த 70 வயதுடைய ஆனொருவர் கொவிட் நிமோனியா, இதய நோய் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயால் கடந்த 28 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆனொருவர் கொவிட் நிமோனியாவுடன் இரத்தம் நஞ்சானமையால் கடந்த 29 ஆம் திகதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த 45 வயதுடைய ஆனொருவர் கொவிட் நிமோனியா மற்றும் தொடர்ச்சியாக ஹெரோயின் பாவித்தமை என்பவற்றால் கடந்த 28 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை தெற்கு பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஆனொருவர் கொவிட் நிமோனியா நாட்பட்ட ஈரல் நோய், ஈரல் செயழிலந்தமை என்பவற்றால் பெப்ரவரி 2 ஆம் திகதி தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆனொருவர் கொவிட் நிமோனியா பக்கவாதம் என்பவற்றால் பெப்ரவரி முதலாம் திகதி தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.