அமெரிக்காவின் உதவியுடன் இலங்கை உயிர்க்காப்பு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட உயிர்க்காப்பு பயிற்சியை முழுமையாக நிறைவுசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

No description available.

கடந்த புதன்கிழமை (24) தொடக்கம் சனிக்கிழமை (27) வரை நடைபெற்ற மேற்படி பயிற்சி வழங்கலின் போது, அமெரிக்காவினால் பயிலுனர்களுக்கான மருத்துவ பயிற்சி மற்றும் முதலுதவி வழங்கலுக்கான ஆலோசனைகள் என்பன வழங்கப்பட்டன.

மேலும் இதில் கலந்துகொண்டவர்களுக்கு உடல் வலிமை, முதலுதவி வழங்கல் பயிற்சி, மீட்பு நடவடிக்கைக்கான நீச்சல் பயிற்சி, எச்சரிக்கைக் குறியீடுகள், பாதுகாப்பற்ற மின்வழங்கலுக்கான குறிகாட்டிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பயிற்சியளிக்கப்பட்டது.

No description available.

இலங்கையர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அமெரிக்கா பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது. சிறுவர்கள் உள்ளடங்கலாக பலரின் உயிர்களைக் காப்பதற்குப் பயன்படக்கூடிய நீரியல் பாதுகாப்பு உத்திகளுக்கான பயிற்சிகளை வழங்குவது குறித்து நாம் பெருமையடைகின்றோம் என்று அமெரிக்கத்தூதரகத்தின் அதிகாரி வெஸ்ட்ரன் கென்னடி தெரிவித்துள்ளார்.


No description available.

இலங்கையர்கள் மத்தியில் நீரியல் பாதுகாப்பு உத்திகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களுக்கு அமெரிக்கத்தூதரகம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No description available.No description available.No description available.