இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு ஆட்டமிழப்பு இடம்பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிவரும் இலங்கை அணியின் திமுத் கருணாரட்னவின் ஆட்டமிழப்பே வியப்பூட்டும் வகையில் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நெதன் லியன் வீசிய பந்தில் திமுத் கருணாரட்ன விக்கெட் காப்பாளர் பீட்டர் நெவிலினால் ஸ்டம்ப் செய்து  ஆட்டமிழப்பு செய்யப்பட்டார்.

குறித்த ஆட்டமிழப்பானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.