(எம்.மனோசித்ரா)
விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே தான் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் செயற்பாடுகள் , நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அமைப்புக்களை மீண்டும் தடை செய்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு மாத்திரம் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூற முடியாது.
எவ்வாறிருப்பினும் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
அதற்கமைய அந்த அமைப்பிற்கு ஆதரவாக செயற்படுகின்றமை , ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நிதி திரட்டுகின்றமை , கருத்துக்களை வெளியிடுகின்றமை என்பன தடை செய்யப்பட்டவையாகும்.
இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சார்பாக செயற்படுபவர்கள் உள்நாட்டில் வசித்தாலும், வெளிநாடுகளில் வசித்தாலும் அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்படும்.
அதற்கமைய நாட்டில் பிரிவினை வாதத்தை தோற்விக்கும் வகையில் செயற்படுதல் அல்லது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கருத்துக்களை முன்வைத்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட விடயங்களாகும் என்பதை உறுதியாகக் கூறுகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM