மின் உற்பத்திற்கு தேவையயன இயற்கையான வளங்கள் இலங்கையில் நிறைந்திருக்கையில் இலங்கை மின்சார சபை அனல் மின் நிலையத்தை பரிந்துரைத்தமை ஆச்சரியமாக உள்ளது. எவ்வாறாயினும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பயன்பாடுகள் தொடர்பாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தற்போது மதிப்பீடு செய்ய வேண்டும் என தேசிய சமுத்திர விவகாரங்களுக்கான  செயலகத்தின் தலைவர் கலாநிதி கிரிஸ் தர்மகீர்த்தி தெரிவித்தார். 

இலங்கையில் அனல் மின் நிலையத்தின் எண்ணிக்கை 19 ஆக ஆரம்பத்தில் காணப்பட்ட நிலையில் தற்போது 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மீள் புதுப்பிக்க கூடிய மின் சக்தி உற்பத்தி தொடர்பில் சிந்திக்க இலங்கைக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சந்தர்ப்பம் தவற விடப்பட்டால் அரசாங்கத்தின் உத்தேச பன்னாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பயனற்றதாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே கிரிஸ் தர்மகீர்த்தி  இதனை தெரிவித்தார்.