கொழும்பு, கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான தேனுவர மெனிகே ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கப்படும்.

தேனுவர மெனிகே ரயில் காலை 6.30 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.01 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.

பதுளை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டு மாலை 4.38 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக பயணிகள் பற்றாக்குறையால் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி தேனுவாரா மெனிகேயின் ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.