(எம்.மனோசித்ரா)
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு தகுதியுடைய பொறுத்தமான அதிகாரிகளை நியமிக்காது, அரசாங்கத்தின் தேவைக்கேற்ப நியமனங்கள் வழங்கப்பட்டதன் விளைவே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டமையாகும்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை இராஜதந்திர பிரதிநிதிகள் முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் ஜெனீவா நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை சுயாதீனமான ஒரு இராச்சியமாகும். அதன் இறையான்மையை பாதுகாப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்படுவோம்.
தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரம் தொடர்பில் பெரிதளவில் பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அவ் இரண்டு விடயத்திலுமே தோல்வியடைந்துள்ளார்.
தேசிய பொருளாதாரத்தினடிப்படையில் அவதானிக்கும்போது தற்போது இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்யின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் மாத்திரமன்றி தற்போது இராஜதந்திர மட்டத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு உரிய அதிகாரிகளை நியமிக்காது அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்களின் உறவினர்களையும் நண்பர்களையும் நியமித்தமையின் விளைவே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டமையாகும்.
இப்பிரேரணையை வெற்றி கொள்வதற்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரதிநிதிகள் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
இலங்கைக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் குரல் கொடுக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் நாட்டு மக்களின் சிவில் உரிமைகள் நீக்கப்பட்டமை, ஜனநாயகம் சிதைவடைந்தமை, அரசியல் கட்சிகள் பழிவாங்கப்பட்டமை, ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டமை, நீதிமன்ற சுயாதீனத்தன்மை இல்லாதொழிக்கப்பட்டமை உள்ளிட்ட பிரச்சினைகளே ஜெனீவாவில் அதிகளவில் தாக்கம் செலுத்தின.
இந்த பிரச்சினைகள் அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்டிருக்காவிட்டால் ஜெனீவா நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்க வேண்டியேற்பட்டிருக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM