-ஹரிகரன்

“இந்தியா இலங்கையின் இறைமையைக் காப்பாற்றுகின்ற நண்பனாக இருக்க விரும்பினால், தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் கடப்பாட்டை அதனால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. மாறாக, தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் இலக்கில் இந்தியா உறுதியுடன் இருந்தால், இலங்கையின் இறைமை விடயத்தில் அத்துமீறாமல், இருக்க முடியாது”

“கருணாநிதி மத்திய அரசில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த நெருக்கடியால் தான், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை மீறி, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வாக்களித்தது”

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது நடுநிலை வகித்து, இந்தியா தனது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இலங்கை விவகாரத்தில் இந்தியா மதில்மேல் பூனையாக இருக்கவே விரும்புகிறது.

இந்தநிலையில் இருந்து பார்த்தால், இந்தியாவின் முடிவு யாருக்கும் ஆச்சரியமளிக்க முடியாது. ஆனாலும், ஜெனிவா வாக்கெடுப்புக்குப் பின்னர், இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும்,- இந்த முடிவு தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் ஒரு தரப்பினர், இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து விட்டது என்று கூறுகிறார்கள்.

அவர்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களும் அடக்கம். இந்தக் கருத்து தமிழகத்துக்கு அப்பால் இருந்தும் இந்தமுறை வெளிப்படுத்தப்படுகிறது என்பது கவனித்துக்குரிய விடயம்.

அதேவேளை, இன்னொரு தரப்பினர் ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியா தந்திரோபாயமாக நடந்து கொண்டிருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அதுபோலவே, இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வருத்தம் கொண்டிருக்கிறார்கள். அதனை பகிரங்கமாக வெளிப்படுத்தியும் உள்ளனர்.

இன்னும் சிலர், இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல், நடுநிலை வகித்துள்ளதையும், அதேவேளை,

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.