புகையிரதத்திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல்களால் உயிர்கள் பறிபோகும் நிலை

Published By: Digital Desk 2

30 Mar, 2021 | 12:29 PM
image

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு உயிராவது பாதுகாப்பற்ற தொடரூந்துக் கடவையில் பலி எடுக்கப்படுகிறது.

பொலிஸ் திணைக்களம் வீதி வாகன விபத்து அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தொடரூந்து விபத்து மரணங்களுக்கு புகையிரத திணைக்களமே பொறுப்பு என்று கைவிரித்து விடுகிறது. 

ஒவ்வொரு உயிரிழப்பு ஏற்படும் போதும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் பரிமாறப்படுவதை தவிர எந்த உருப்படியான நடவடிக்கையோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமோ வழங்கப்படுவதில்லை.

காவலாளிகளை நிறுத்துவதை விட தன்னியக்க பொறிமுறைகளை பயன்படுத்துவது உயிர் பாதுகாப்புக்கு உயர்வானது என ஆய்வுகள் காட்டுகின்றன.

எனவே காவலாளிகளை குற்றம்சாட்டுவதை விடுத்து  தன்னியக்க பொறிமுறைகளைக் கொண்ட பாதுகாப்பு கடவைகளை நிர்மாணிப்பதற்கு புகையிரத திணைக்களம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அதுவரைக்கும் பாதுகாப்பற்ற கடவைகளில் ஏற்ப்படும் உயிரிழப்புகளுக்கும் ஏனைய சேதங்களுக்கும் ஏனைய நாடுகளைப் போல் பொறுப்புகூறுவதுடன் உரிய இழப்பீட்டுக்  கொடுப்பனவுகளை வழங்க புகையிரத திணைக்களம் முன்வரவேண்டும். 

தவறினால் வெகுஜன அமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளும் நியாயத்தையும் பொறுப்புகூறலையும் நிலைநாட்டுவதற்கு உரிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். 

தன்னியக்க கடவைகள் நிர்மாணிக்கப்படும் வரை தொடரூந்து பாதையை ஊடறுக்கும் பாதையின்  இருபுறமும்  5-7 மீற்றர் தூரத்தில் வேகத்தடுப்பான்பிட்டிகள்  ( Speed Breaker Humps )நிர்மாணிக்கப்படுவதும் புகையிரதப்பாதை தொடர்பான எச்சரிக்கைப்பலகைகள் நிறுவப்படுவதுடன்  அந்தப் பலகைகளில் விபத்து ஏற்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தால் வாகனச் சாரதிகளின் அவதானத்தை தூண்டுவதுடன் விபத்துக்களை குறைக்கவும் விபத்துஏற்பட்ட நிலையில் அதனால் உருவாகும் பாதிப்புகளையும் குறைக்க முடியும். 

அதேவேளை பாதுகாப்பற்ற கடவைகளை அண்மிக்கும் போது தொடரூந்தின் எச்சரிக்கை ஒலியை எழுப்புமாறு தொடரூந்து சாரதிகள் பணிக்கப்படவேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13