காணாமல் போனோர் தொடர்பிலான சட்டத்தின் பிரகாரம் நாம் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றி திசை திருப்பப்படலாம் என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. யுத்தக்குற்ற நீதிமன்றம் அமைப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் நிறுவனமாக அவ்வலுவலகம் அமையலாம். இது மிகவும் பயங்கரத்தன்மை கொண்டதாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.