(எம்.மனோசித்ரா)
இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு பரிசோதனைகளிலும் குறித்த இரசாயன பதார்த்தம் காணப்பட்டதை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திகா ஜீ. சேனாரத்ண, ஆய்வு அறிக்கை இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாடளாவிய ரீதியில் தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பெற்று பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தரமற்ற தேங்காய் எண்ணெய் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா 5 மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட 100 மாதிரிகள் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM