காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல அறிகுறிகள் கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் என்று மருத்துவ நிபுணர்கள் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவோம். தற்போது உருமாறிய கொரோனா பாதிப்பிற்கு புதிய அறிகுறிகள் என சிலவற்றை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வரும் உலகளாவிய சுகாதாரத்துறையினர், அண்மையில் நடத்திய ஆய்வின் படி கொரோனா தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி எம்முடைய வாய்ப் பகுதியில் இருக்கும் செல்களை அழித்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதால், வாய் மற்றும் உதடு வறண்டு போதல், சுவை உணரும் திறன் குறைதல், உதடு வெடிப்பு அல்லது உதட்டில் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் கொப்பளங்கள் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை உண்டாக்குகின்றன. எனவே கூறிய அறிகுறிகள் ஏற்பட்டால் அவை கூட கொரோனா பாதிப்பின் அறிகுறி என்று தான் கருத வேண்டும்.

அண்மைய ஆய்வின்படி கொரோனா வைரஸ் ஒரு மனித உடலில் புகுந்தால் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உருமாற்றம் பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாய் பகுதியைதாக்கும் கொரோனா வைரஸ் மக்களின் ஜீரண மண்டல பகுதியிலும், சுவாச மண்டல  பகுதியிலும் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இனி உதடு வெடிப்பு, நாக்கு வறண்டு போதல், சுவை உணரும் திறனிழப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக கொரோனா பாதிப்பிற்கான பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டுமென மருத்துவ துறையினர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.