(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசியின் முதலாவது ஊசியை போட்டுக்கொண்டோரில் நூற்றுக்கு 80 சதவீதமானவர்களுக்கு அதிகூடிய பலன் கிடைத்துள்ளது. 

இது தொடர்பாக புதிதாக நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக  மருத்துவபீடத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசியின் முதலாவது ஊசியை போட்டுக்கொண்டோரில் நூற்றுக்கு 80 சதவீதமானவர்களுக்கு அதிகூடிய பலன் கிடைத்துள்ளதுள்ளது.

புதிதாக நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

இது மகிழ்ச்சியான விடயமாகும். எனினும், முதலாவது தடுப்பூசியை போட்டுக்கொண்டால் போதுமானது என கருத கூடாது. 

கொவிட் 19 தொற்று நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு  இரண்டாவது தடுப்பூசியையும் கட்டாயமாக போட வேண்டும்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பபூசியின் முதலாவது ஊசியானது ‘கோபிஷீல்’ எனும் வகையைச் சார்ந்தது. 

ஆகவே, அதே வகையைச் சார்ந்த இரண்டாவது தடுப்பூசியையும் வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வது மிக முக்கியமாகும்.

மேலும், முதலாவது தடுப்பூசி ஒரு வகையிலும், இரண்டாவது தடுப்பூசி மற்றொரு வகையிலும் வழங்க முடியுமா? என வெளிநாட்டு மருத்துவ  ஆராய்சியாளர்கள் இந்நாட்களில் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்”  எனவும் வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவி்த்தார்.