யாழில் 1,100 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்  

Published By: Gayathri

29 Mar, 2021 | 08:45 PM
image

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 127 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதில் 51 பேர் திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதனை அடுத்து குறித்த கிராம சேவையாளர் பிரிவு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வெளியில் இருந்து உள்நுழையவும் , வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த பகுதிக்குள் 1,100 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் அநேகமானவர்கள் திருநெல்வேலி சந்தையில் தொழில் புரிபவர்களும், தினசரி கூலி தொழிலாளிகளும் உள்ளடங்குவதனால் , அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உறவுகள் முன் வர வேண்டும் என தவிசாளர் கோரியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26
news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக...

2025-03-15 17:30:49
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25