இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்கு ஜாவா பகுதியிலேயே இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது.

இந்த தீ விபத்து பல மைல்களுக்கு அப்பால் உணரப்பட்டதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த வெடிப்பு அண்டை குடியிருப்பு பகுதிகளில் பொருள் சேதத்தை ஏற்படுத்தியதாக நியூசிலாந்து செய்திச் சேவைகளும் குறிப்பிட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நேரில் கண்ட சாட்சிகள் அந் நாட்டு ஊடகங்களிடம், அதிக மழை, மின்னல் மற்றும் இடியின் பின்னர் இது நிகழ்ந்ததாக கூறியுள்ளனர்.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக கூறப்படுகிறது.