மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான காற்று வீசி வருகிறமையால் கடல் மற்றும் வாவி மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடல் மற்றும் வாவி மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியுள்ளனர்.  

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் கருத்து வெளியிடுகையில் இம்மாவட்டத்தில்...

தற்போது தென்மேற்கு பருவ பெயர்ச்சி காற்று கடுமையாக வீசிவருகின்றது. இக்காற்றை இப்பிரதேச மக்கள் கச்சான் காற்று என அழைக்கின்றனர். கடுமையான வெப்பத்துடன் இக்காற்று வீசுவதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இறுதி வரை இக்காற்று வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

-ஜவ்பர்கான்