மும்பை தாக்­கு­த­லுக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்­தியா விளை­யா­ட­வில்லை. இந்த நிலையில் இந்­தியா ­பா­கிஸ்தான் இடையே போட்டி தொடர் நடத்த இரு­நாட்டு கிரிக்கெட் சபைகளும் முடிவு செய்­தன. இப்­போட்­டிக்கு பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரீப் அனு­மதி அளித்தார். ஆனால் இந்திய மத்­திய அரசு அனு­மதி தர­வில்லை. கிரிக்கெட் சபை அனு­மதி கேட்டுகொண்டும் அளிக்­க­வில்லை.

இத­னி­டையே இந்­தியகிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் 2 நாள் கெடு விதித்­தது. அந்த கெடு நேற்று முன்­தி­னத்­துடன் முடிந்­தது. ஆனால் இந்திய கிரிக்கெட் சபை எந்த பதிலும் அளிக்­க­வில்லை.

இந்த நிலையில் இந்­தியா – பாகிஸ்தான் போட்டி தொடர் முடிந்து போன கதை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷிகார்­யர்கான் கூறி யுள்ளார்.


அவர் கூறியதாவது,சனிக்­கி­ழமை மாலை வரை இந்­திய கிரிக்கெட் சபையிடம் இருந்து எந்த பதிலும் வர­வில்லை. எனவே இந்த
விவ­காரத்தை இப்போது நாங்கள் கைவிட முடிவு செய்து விட்டோம் என தெரிவித்தார்.