மட்டக்களப்பில் பல பிரதேசங்களில் சட்டவிரோத கட்டடங்கள் ; மாநகர சபை ஆணையாளர் 

Published By: Priyatharshan

16 Aug, 2016 | 02:32 PM
image

(சசி)

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் இருந்த 102 நீர் தேங்கும் பகுதிகளில் 3இல் இரண்டு பிரதேசங்கள் மக்களால் அத்துமீறி சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இன்றையதினம் மட்டக்களப்பு பார் வீதி தோணாவை பகுதியில் துப்புரவு செய்யும் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட பார்வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை, ஏறாவூர் நகர சபை ஆகியவை இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இந்த துப்புரவு செய்யும் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் கொத்தணியாக இணைந்து அவர்களுடைய பிரதேசங்களிலிருக்கின்ற வேலைகளை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

இந்த சிரமதான நிகழ்வு முக்கிய நோக்கம் என்னவென்றால் உள்ளுராட்சி மன்றங்கள் வளம் நிறைந்த உள்ளுராட்சி மன்றங்களைப் பகிர்ந்து கொண்டு அந்த வளங்கள் உச்ச மட்டத்தில் பகிர்ந்துகொண்டு பயன்படுத்தி மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யவேண்டும் என்பதாகும்.

அந்த வகையில் எங்களுடைய கொத்தணி உள்ளுராட்சி மன்றங்கள் வளங்களைப் பயன்படுத்தி இந்த செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். இதற்கு முன்னர் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை, ஏறாவூர் நகர சபை பிரதேசங்களில் இவ் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் மழைகாலத்தினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு பார் வீதி தோணாவைத் துப்பரவு செய்கின்றோம். ஆனால் அதிகமான தோணாக்கள் மக்களினால் முறையற்ற விதத்தில் அபகரிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. 

இவ்வாறான சமூக சிந்தனையில்லாத செயற்பாடுகளினால் மட்டக்களப்பில் இருக்கின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்ற நிலை இருக்கின்றது. மழை காலத்தில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு இயற்கையான வடிகான்களாக தோணாக்கள் காணப்பட்டன.

ஆரம்ப காலங்களில் மட்டக்களப்பு நகரத்தினை பொறுத்தவரை நீர் தேங்கியிருக்கக் கூடிய இடங்கள் (102) இருந்திருக்கின்றன. அவை தற்போது அவற்றில் 3 இல் இரண்டு பகுதியான நீர்த்தேக்கங்கள் நிரப்பி மக்கள் சட்டவிரோதமான கட்டங்களைக் கட்டியிருக்கின்றதனால் மழைக்காலத்தில் நீர் வழிந்தோடும் நிலை பாதிக்கப்பட்டு வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் கூட பொது மக்கள் மாநகர சபையைத்தான் நொந்து கொள்கின்ற நிலை காணப்படுகின்றது.

இந்தச் சட்டரீதியற்ற முறையில் கட்டங்களைக்கட்டுவதனை தவிர்ப்பதற்கு அதற்குரிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தவிர்த்துக் கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22