பதுளை மாவட்டத்தின் மாணவியொருவர் மாலைதீவு கரப்பந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாட ஒப்பந்தம்

27 Mar, 2021 | 04:17 PM
image

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெலி தோட்ட, மேமலை பிரிவில் வசிக்கும் ஜெயராம் திலக்ஸனா என்பவர் கரப்பந்தாட்ட வீராங்கனையாவார். 

இவர் மாலைதீவு கரப்பந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த மாத இறுதியில் காலியில் இடம்பெற்ற கெலக்ஸி கோப்பைக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. 

இதில் இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட தரப்படுத்தலில் உள்ள முதல் 8 அணிகள் பங்குப்பற்றுவது வழமையாகும். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கரப்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேமலை தோட்டத்தைச் சேர்ந்த திலக்ஸனா, சிரிசாந்தி ஆகிய வீராங்கனைகள் விளையாடினர். 

இவர்களில் திலக்ஸனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் பிரகாசித்தமையின் காரணமாக மாலைதீவு கரப்பந்தாட்ட விளையாட்டு கழகம் ஒன்றிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

வெளிநாட்டு கரப்பந்தாட்ட விளையாட்டு கழகம் ஒன்றில் விளையாட ஒப்பந்தமான முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் இவர் தனதாக்கி கொண்டுள்ளார். 

இது குறித்து இவ்வீராங்கனையின் பாடசாலை பயிற்சி ஆசிரியரும் தற்போதைய வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய உப அதிபருமான என்.சுந்தராஜ் கருத்து தெரிவிக்கையில்,

“மலையகத்தின் புரட்சி “லயத்தில்” இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு திலக்ஸனா சிறந்த முன்னுதாரணம்.

இவர் 2012 ஆம் ஆண்டு எனது பயிற்சியின் மூலம் மேமலை தமிழ் வித்தியாலய கரப்பந்தாட்ட அணிக்கு விளையாடி பல வெற்றிகளுக்கு காரணமானார்.

இவரது வளர்ச்சி மலையகத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதையிட்டு பெருமை அடைகின்றேன்” என குறிப்பிட்டார். இவர் இப்பகுதியில் உள்ள விரியும் சிறகுகள் விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15