தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 182 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் என்னும் தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ஆம் திகதியன்று தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மையம் கூட்டணி, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும், தனியார் இணையதள நிறுவனங்களும், தனியார் தன்னார்வ அமைப்புகளும் கருத்துக்கணிப்புகளை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் என்னும் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் முடிவில், மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 182 இடங்களில் வெற்றி பெறும் என்றும், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெறும் என்றும், ரி.ரி.வி தினகரன் தலைமையிலான கூட்டணி ஓரிடத்தில் வெல்லும் என்றும் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
இந்நிலையில் கருத்து கணிப்பு முடிவுகளை குறித்து மு.க. ஸ்டாலின் பேசுகையில்'
கருத்துக்கணிப்பு முடிவுகள் உற்சாகத்தை தரும். வாக்குகள்தான் வெற்றிகளைத் தரும் என்று குறிப்பிட்டு, தன் கட்சித் தொண்டர்களுக்கு அரசியல் களத்தில் அயராது பாடுபடுங்கள் என அறிவுரை கூறியிருக்கிறார்' என்பது குறிப்பிடதக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM