லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தினை அண்மித்துள்ள தலாங்கந்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை ஓரத்தில் உள்ள குடியிருப்பின் முன்னால் நிறுத்தி வைக்கப்படடிருந்த முச்சக்கர வண்டியினை நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளனர. 

இன்று காலை முச்சக்கரவண்டியின் உரிமையாளர் மற்றும் பிரதேச மக்கள் அப்பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது, அப்பகுதியில் உள்ள 10 அடி பள்ளம் கொண்ட ஆற்றில் முச்சக்கரவண்டி கிடப்பதினை கண்டுள்ளனர். 

இதனையடுத்து முச்சக்கரவண்டியின் உரிமையாளர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரனையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)