சுற்றுலாத்துறையில் பெண்களுக்கு வாய்ப்பு

Published By: Digital Desk 4

26 Mar, 2021 | 04:24 PM
image

(செ.தேன்மொழி)

பெண்கள் பல்வேறு துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்ற நிலையில் , அவர்கள் சமூகத்தில் பாரிய பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர்.

குடும்பத்திலும் , சமூகத்திலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துவரும் இருவர்களின் பணிகளை ஹோட்டல் துறைகளுக்கும் பெற்றுக் கொள்வதற்காக ஹில்டன் தீர்மானித்துள்ளதுடன் , அதற்காக விசேட திட்டமொன்றையும் மேற்கொண்டுள்ளது. 

இதன்போது ஹில்ட்டனுடன் , இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமும் (SLITHM) இணைந்துக் கொண்டுள்ளது.

'ஹில்ட்டன் லிய திரிய ' எனும் தொனிப்பொருளில் , சுற்றுலாத் துறை சார்ந்த  ஹோட்டல் துறையில் இணைந்து பணிபுரிவதற்காக , இந்நாட்டு யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ள ஹில்டன் நிறுவனம் , இன்று வெள்ளிக்கிழமை அதனை அங்குரார்ப்பணம் செய்துவைத்தது.

இதன்போது தெரிவுச் செய்யப்பட்டிருந்த ஒன்பது யுவதிகளை பயிற்சியில் இணைத்துக் கொண்டமைக்காக அனுமதி சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது தெரிவுச் செய்யப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்காக நடைமுறை அறிவினை பெற்றுக் கொடுப்பதுடன் , அவர்களின் திறமைகளை விருத்திச் செய்வதற்காகவும் , பணிசார் அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இரண்டு தொகுதிகளாக இடம்பெறும் இந்த பயிற்சி நெறியின் போது, துறைசார் கோட்பாடுகள் தொடர்பில் SLITHM  இல் இருமாத பயிற்சியும், நாட்டிலுள்ள ஹில்டன் கிளைநிறுவனங்களில் ஆறு மாதகால பயிற்சியும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சிகாலத்தின் போது தங்குமிட வசதிகள் செய்துக் கொடுக்கப்படுவதுடன் , கொடுப்பனவும் வழங்கப்படும். பயிற்சியின் பின்னர் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் , இந்நாட்டிலும் , வெளிநாடுகளிலும் உள்ள ஹில்டன் நிறுவனக்கிளைகளில் பணிபுரிவதற்கான வாய்ப்பும் பெற்றுக் கொடுக்கப்படும்.

உலகளாவிய ரீதியில் விருந்தோம்பல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் முதலிடம் பெற்றுக் கொண்டுள்ள ஹில்டன் நிறுவனம், உலகப்புகழ்பெற்ற 18 வர்த்தக நாமங்களை தன்பசப்படுத்திக் கொண்டுள்ளது.

118 நாடுகளில் தனது நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஹில்டன் நிறுவனம் , உலகளாவிய ரீதியில் சிறந்த பணிகளை செய்துவரும் நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

ஹில்டன் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேற்படி பயிற்சி நெறிக்கான மாணவிகளாக மகேந்திரன் கிரிஜா , சஞ்சனி சங்கல்பனா , சயுரி ஜயதிலக்க , அருணி நரேந்திரன் , செஹாராபெரேரா, தக்ஷிலாபொரேரா, ஹெரந்தி வாசனா, தினேத்மா பமுனு ஆராச்சி மற்றும் விஸ்வா தசுனி ஆகியோர் தெரிவுச் செய்யப்பட்டிருந்ததுடன் , அவர்களை பயிற்சியில் இணைத்துக் கொண்டமையை உறுதிச் செய்யும் வகையில் சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ கூறியதாவது ,  இலங்கை பெண்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்த ஹில்டன் போன்ற ஒரு உலகளாவிய  வர்த்தக நாமத்தை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றமை தொடர்பில் மகிழ்ச்சி அடைவதுடன் , இவர்களினால் வழங்கப்படும் சேவைகளின் பயனை பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து பெண்களிடமும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பெண்கள் சமூகத்தில் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் ஹில்டன் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்படும் 'ஹில்ட்டன் லிய திரிய ' பயிற்சி திட்டம் பெண்களுக்கான வலுவூட்டல்களை மேற்கொள்ளும் பயனுள்ள திட்டமாக விளங்கும் என்று நம்புகின்றோம்.

இவ்வாறான  செயற்பாடுகளை மேலும் விருத்திசெய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இந்நிலையில் பெண்கள் இத்தகைய பயிற்சிகளை பெற்றுக் கொண்டு இந்த துறைகளில் மேலும் பயன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது , ஹில்டன் கொழும்புக்கான பொது முகாமையாளர்லிண்டா கீப்பிங்  , ஹில்டன் நிறுவனத்தின் இலங்கைக்கான பகுதி பொது முகாமையாளர் மனேஷ்  பெர்னாண்டோ,  இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ ஆகியோர் கலந்துக் கொண்டிருந்ததுடன் , மாணவிகளுக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்திருந்தனர். 

ஹில்டன் கொழும்பு கிளையின் மனித உரிமைபிரிவின்  பணிப்பாளர் அச்சலா சொய்சா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55