மாத்தையா “றோ” உளவாளி ; பிரபாகரனை அழித்து தலைமையேற்பதே அவருக்கு வழங்கப்பட்ட 'அசைன்மெண்ட்'  

Published By: Priyatharshan

16 Aug, 2016 | 12:49 PM
image

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்த மாத்தையா, இந்தியாவின் 'றோ' அமைப்பின் உளவாளியாக செயல்பட்டார் என இந்திய பத்திரிகையாளர் நீனா கோபால் எழுதியுள்ள புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் நீனா கோபால்தான் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார். தற்போது "The Assassination of Rajiv Gandhi" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நீனா கோபால் எழுதியுள்ளார். 

அந்த புத்தகத்தில் மாத்தையா குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

1989ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான 'றோ'வின் உளவாளியாக மாத்தையா நியமிக்கப்பட்டார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் பெரும்பான்மையானோர் நம்பிக்கையைப் பெற்று பின்னர் தலைவராக இருந்த பிரபாகரனை அழித்துவிட்டு தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பதுதான் மாத்தையாவுக்கு கொடுக்கப்பட்ட 'அசைன்மெண்ட்' பொறுப்பு.

1993 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு வெளிநாடு ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கப்பல் குறித்த தகவலை 'றோ'வுக்கு கொடுத்ததும் மாத்தையாதான். அந்தக் கப்பல் சென்னை அருகே சுற்றி வளைக்கப்பட கப்பலை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் கிட்டு.

கிட்டுவின் கப்பல் வரும் தகவலை மாத்தையாதான் இந்தியாவுக்கு காட்டி கொடுத்தார் என சந்தேகித்து தமிழீழ விடுதலைப் புலிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 

19 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டு டிசம்பரில் மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்தனர் விடுதலைப் புலிகள். அவரது ஆதரவாளர்கள் 257 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இலங்கையில் இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த போது, விடுதலைப் புலி்களுக்குள் 'றோ' அமைப்பு ஊடுருவியது. பிரபாகரன் மனதில் என்ன ஓடுகிறது என்ற சமிக்ஞைகளை நாம் சரியாக உணர்ந்திருந்தால் ராஜீவ்காந்தியை நாம் இழந்திருக்கமாட்டோம் என றோ அதிகாரி ஒருவர் கூறினார்.

ராஜிவ்காந்தி அளித்த இறுதிப் பேட்டியில், தெற்காசியாவின் எந்த ஒரு தலைவரும் சக்திமிக்கவராக உருவானால் அவர் கொல்லப்படுவது தொடருகிறது. 

இந்திரா காந்தி, ஷேக் முஜிப், பூட்டோ, ஜியா உல் ஹஹ், எஸ்.ஆர்.டபிள்யூ.டி. பண்டாரநாயக்க என இந்த வரிசை தொடர்கிறது.  நானும் சில கருப்பு சக்திகளின் இலக்காக இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு நீனா கோபால் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47