யாழ்ப்பாணம் நகரில் இரண்டு தெருக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி கஸ்தூரி வீதி, பவர்-ஹவுஸ் வீதி மற்றும் மணிப்பாய் சந்தி வரை காங்கேசன்துரை வீதியின் பல பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ் மாவடத்தில் நேற்றைய தினம் மாத்திரம் மொத்தம் 77 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவரிகளில் பெரும்பாலானோர் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதனால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.