அரசியல் நடவடிக்கைகளுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் ச.தொ.ச ஊழியர்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதிவான் இன்று பிறப்பித்தார்.

2010 - 2014 வரை வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது ச.தொ.ச நிறுவனத்தின் 153  ஊழியர்களை அவருடைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதோடு , அதனால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ச.தொ.ச.வின் முன்னாள் தலைவர் இராஜ் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சர்கர் ஆகியோருக்கெதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.