யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில்  இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியுள்ளதை அவதானிக்க முடிந்துள்மையும் அங்கு குழப்பமான நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மக்களின் எதிர்ப்பை சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியதையடுத்து மக்களின் எதிர்ப்பின் பிரகாரம் அகழ்வு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.