புகையிலை மற்றும் ஆல்கஹால் ஆணைய சட்டத்தின் விதிகளை மீறியமைக்காக கைத்தொழில் அமைச்சர் விமால் வீரவன்சவுக்கு எதிராக 'Dampal Daruwo' என்ற தேசிய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறையிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் கறுவாபட்டை சிகரெட் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வில் விமல் வீரவன்ச, குறித்த சிகரெட்டை வாயில் வைத்திருந்தார்.

இது புகையிலை மற்றும் ஆல்கஹால் ஆணைய சட்டத்தின் விதிகளை மீறி சிகரெட் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. 

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை சட்டத்தின் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கறுவாபட்டை சிகரெட்டும் சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டவிரோதமானது என்று புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இந் நிலையிலேயே இது தொடர்பில் வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி பொலிஸ் தலைமையகத்தில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக முறைப்பாடு அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக Dampal Daruwo என்ற தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மகேஷ் ஜெயரத்ன கூறினார்.