நடிகர் திலீப் குமாருக்கு பத்மவிபூஷண் விருது:   நேரில் வழங்கினார் ராஜ்நாத் சிங்

By MD.Lucias

14 Dec, 2015 | 07:45 PM
image

பொலிவுட் சினிமாவின் அடையாளமாகத் திகழும் பழம்பெரும் நடிகர் திலீப் குமாருக்கு நாட்டின் உயரிய பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

பொலிவுட் திரையுலகை கடந்த 1950ஆம் ஆண்டு முதல் ஆட்டிப் படைத்து எண்ணற்ற ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் நடிகர் திலீப் குமார். 

தேவதாஸ், மதுமதி, முஹல்-இ-அஸம், கங்கா ஜமுனா, லீடர், ராம் அவுர் ஷ்யாம் போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் அவ ருக்கு தேசிய அளவில் பெரும் புகழை அள்ளிக் கொடுத்தது. இறுதியாக 1998ஆம் ஆண்டு குயிலா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின், திரையுலகில் இருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டார்.

கௌரவம்

திரையுலகில் திலீப்குமாரின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு நாட்டின் உயரிய பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. சுகயீனத்தால் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வில்லை.

இந்நிலையில், பத்மவிபூஷண் விருதினை மும்மையில் உள்ள அவரது இல்லத்துக்கே நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  வழங்கினார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right